இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தனது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி தொழில் முனைவொர்களை ஊக்குவித்தும் அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு
அவ்வகையில் 1-3-2013 அன்று ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் சேவை, பயிற்சி பற்றிய விபரங்களை தொழில் முனைவோர் மத்தியில் அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடைபெற்றது.
அந்த வகுப்பில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு. கே.திருப்பதி ராஜன் அவர்கள் பயிற்சி மையத்தின் சிறப்புகள், ஏற்றுமதி தொழிலில் உள்ள வாய்ப்புகள், பயிற்சியில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பேசினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மூத்த தலைவர் மற்றும் தலைவர் YES அமைப்பின் தலைவர் திரு. வி. நீதிமோகன் பேசுகையில், அனைவரின் சீரிய முயற்சியாலும் மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதிகள் ஏற்றுமதியின் மையப்பகுதியாகவும் வழிகாட்டும் தலமாகவும் செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மற்றும் சமுதாய சிந்தனையோடும் எதிர்கால மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்திய ஒரு அமைப்புதான் இந்த ஏற்றுமதி மேம்பாட்டு மையம் என்ற சிறப்பான தகவலையும் வந்திருந்த உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலும் பேசினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு. ஜே.கே.முத்து அவர்கள், தன்னுடைய ஏற்றுமதி தொழில் அனுபவங்களையும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் அமைப்பின் தொழில் முன்னேற்றக் கொள்கைகளையும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயிற்சி மற்றும் என்ன பொருட்களுக்கு எந்த எந்த நாடுகளில் தேவை உள்ளது. ஏற்றுமதியாளருக்கு தேவையான குணநலன்கள், திறமைகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் முறைகள், ஏற்றுமதிக்கு உதவும் அமைப்புகள், அரசாங்கத்தின் சிறப்பு திட்டங்கள் பற்றியும் ஏற்றுமதி தொழிலை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் சீறிய நடவடிக்கைகள் பற்றியும் வருகை புரிந்த அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தொழில் தொடங்க ஆர்வம் கொண்டு கலந்து கொண்ட வியாபார நண்பர்களுக்கு எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்புரையாற்றினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர் திரு. இராமகிருஷ்ணன், வெளிநாடு சென்று அங்கு அலுவலகம் ஆரம்பித்து இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்யலாம் என்றும் தான் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டில் அலுவலகம் திறந்து சிறப்பான முறையில் வியாபாரம் செய்து வருவதாகவும் உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் உரையாற்றினார்.