கடந்த டிசம்பர் 16 சனிகிழமை அன்று தமிழ்நாடு சேம்பர் கட்டிட வளாக “ஹட்சன் அரங்கில்” இபிசி மிக பிரம்மாண்ட முறையில் நடத்திய “ஏற்றுமதியாளர் உச்சிமாநாடு” சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவரும் இது ஒரு மாபெறும் வெற்றி என உளமாற வாழ்த்தினார்கள்.
இந்திய பொருட்களை உலக அரங்கில் ஏற்றுமதி செய்தல் தொடர்பான விழிப்புணர்வை பரப்பும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் செவ்வனே அரங்கேரின.
இந்த உச்சிமாநாடு குறிப்பாக பின் வரும் அம்சங்களில் கவனம் செலுத்தியது:
நல்ல தரமான பொருட்கள் தயாரித்தல்
- அப்பொருளுக்கு சரியான விலை நிர்ணயித்தல்
- குறிப்பிட்ட பொருட்களுக்கு ஏற்ற நாடுகளை தேர்வு செய்தல்
- இலக்கான வாடிக்கையாளர்களை அடையும் யுக்திகள்
- நேரம் தவறா போக்குவரத்து மற்றும் விநியோகம்
- முறையான ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பரிமாறுதள்
- ஏற்றுமதி தொழில் தொடங்கும் முறையான வழிமுறைகள்
- ஏற்றுமதி தொழிலில் பெறும் வெற்றி அடையும் வழிமுறைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்புரைகள் அங்கிகாரங்கள் வாழ்த்துரைகள் செவ்வனே அரங்கேறின.