ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் இந்த வருடத்திற்கான புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட பயிற்சி வகுப்பு 25.4.2014 அன்று நடைபெற்றது.
இவ்வகுப்பில் India’s Potential Products for Exports என்ற தலைப்பில் மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதிராஜன் அவர்கள் பேசினார்கள். இதற்கு முன்னதாக உரையாற்றிய துணைத்தலைவர் திரு.J.K.முத்து அவர்கள், உறுப்பினர்கள் இந்த வகுப்பில் என்னென்ன பயிற்சிகளை பெறப்போகிறார்கள் என்பதை தெளிவாக விளக்கினார்கள். அதாவது,
- ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி?
- இலாபத்தை கணக்கிடுவது எப்படி?
- ஏற்றுமதிக்கு இண்டர்நெட்டை பயன்படுத்துவது எப்படி?
- ஏற்றுமதிக்கான ஆவணங்களை தயாரிப்பது எப்படி?
- இடர்களை சமாளிப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி?போன்ற பயிற்சிகளை இங்கே கற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து India’s Potential Products for Exports என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய தலைவர் திரு.K. திருப்பதிராஜன் அவர்கள், ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அந்நியச் செலாவணியை நம் நாட்டிற்குள் கொண்டுவருவது அவர்களது கடமை.
இந்தியாவின் வலிமை விவசாய விளைப்பொருட்களில் தான் உள்ளது. ஏனெனில் அதிகமான விளைநிலங்கள் இந்தியாவில் இருக்கிறது என்றார். உதாராணமாக, உலகில் வத்தலை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதற்கடுத்ததாக மிளகு, மஞ்சள், மல்லி போன்ற இந்திய விளைபொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது என்றார்.
மேலும் நம் நாட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வெளிநாட்டில் முக்கியத்துவம்(potential) இருக்கிறது என்பதை கூறியபோது, திருப்பூர், கரூர், மதுரை போன்ற இடங்களில் கிடைக்கும் ரெடிமேட் கார்மென்ஸ்களுக்கு உலகளவில் முக்கியத்துவம் இருக்கிறது.
அதேபோல் HANDICRAFT, GEM’S&JEWEL’S, TEA, PHARMACUETICALS, ENGINEERING PRODUCTS, COFFEE, CHEMICALS, SPORTS, CASHEW போன்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் முக்கியத்துவம் இருக்கிறது என்றும் இவற்றை ஏற்றுமதி செய்வது பலனைத்தரும் என்றும் பேசினார்.
HS CODE
நாம் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு பொருளும் உலகின் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. எனவே நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களை அறிய HORMONIZED CODE எனப்படும் HS CODEஐ ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முடிந்தவரைக்கும் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான HS CODEஐ யாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு திருப்பதிராஜன் அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
ஏற்றுமதி செய்ய தேவையான ஆவணங்கள்
புதிதாக ஏற்றுமதி செய்யத்தொடங்கும் உறுப்பினர்கள் என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்பதை விளக்கினார்கள்.
அதன்படி
- PAN CARD
- COMPANY NAME
- CURRENT ACCOUNT WITH BANK
- IE CODE (IMPORT EXPORT CODE)
- TIN/VAT NUMBER
- CST NUMBER
- SERVICE TAX NUMBER
- EXCISE NUMBER போன்றவை தேவை என்று கூறி அதற்குரிய விளக்கங்களை அளித்தார்.