தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்கு 22-02-2016 அன்று ஹட்சன் அரங்கத்தில் நடைபெற்றது.
தொடக்கமாக வரவேற்புரையாற்றிய தலைவர் கே.திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது, ஒவ்வொரு வர்த்தகரும் தங்களது பொருளை வாங்குவதன் மூலமோ விற்பதன் மூலமோ லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிக்கான பேச்சுவார்த்தை தான் NEGOTIATION.
இதுபோல், இரண்டு வர்த்தகர்களும் தங்களது பொருட்களை வியாபாரம் செய்யும் போது இருவருமே லாபம் சம்பாதிக்கக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தால் இந்த வர்த்தக நட்பு நீண்ட காலம் தொடரும். இதற்கான பயிற்சி வகுப்பு தான் A WORKSHOP ON NEGOTIATION SKILLS என்றார்.
அடுத்ததாக பேசிய காவேரி அவர்கள், ஆந்திரபிரதேசத்தில் நரசாப்பூர் என்ற நகரத்திற்கு அருகே சீதாபுரத்தில் நடந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் கலந்துகொண்டதை பற்றியும் அந்த ஊர், திருப்பூர் போல வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக பேசிய FIEO செல்வநாயகி அவர்கள், நாம் வளர்ந்த நாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல செயல்பட வேண்டும். மேலும் இந்தியாவிலிருந்து FREE TRADE AGREEMENT நாடுகளை தேர்ந்தெடுத்து அங்கு ஏற்றுமதி செய்வதன்மூலம் நமது பொருட்களுக்கான விலையை நாமே நிர்ணயித்தால் நமக்கு பயன்கள் அதிகம் என்றார்.
இதற்கடுத்தாக சிறப்புரையாற்றிய திரு.நாதன் அவர்கள், PURCHASE NEGOTIATION, SALES NEGOTIATION, அதாவது பொருட்களை வாங்கும் போது, விற்கும் போது வணிகர்களிடம் எவ்வாறு பேசுவது என்பது குறித்து விளக்கமாக உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.