தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 29.3.2013 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மார்ச் 2013 வருடத்திற்கான மாத பயிற்சி முகாம் நடைபெற்றது.
அதில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு. கே.திருப்பதி ராஜன் வந்திருந்த புதிய உறுப்பினர்களின் முன் மிகச்சிறப்பாக உரையாற்றினார். புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் பின்னர் ஏற்றுமதி தொழிலுக்கு உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஒரு வருடம் நடக்க விருக்கும் பயிற்சி வகுப்புகளின் விபரங்கள், தலைப்புகள், சிறப்பு விருந்தினர்கள் பற்றியும் மிக விளக்கமாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்தார். பின்னர் மார்ச் மாத சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களாக மத்திய அரசின் ஏற்றுமதி ஆய்வுக்கழகம்- சென்னை அலுவகத்திலிருந்து இணை இயக்குனர்களான திரு.என்.சுந்தரராஜன், திரு.பி.சூரிய நாராயணன் மற்றும் திரு.ஆர்.வெங்கடராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் சிறப்பான, தெளிவான விபரங்கள் உள்ள உரையின் மூலம் மத்திய அரசின் பல்வேறு ஊக்கமளிக்கும் ஏற்றுமதி திட்டங்கள் பற்றி உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக தெரிந்து கொண்டனர். இணை இயக்குனர்கள் மூன்று பேரிடமும் நன்றாக ஒற்றுமையும் ஒருங்கிணைப்புத்தன்மையும் பொறுமையும் அதிக புத்திக்கூர்மையும் கண்டு மைய உறுப்பினர்கள், துணைத்தலைவர் மற்றும் தலைவர் அவர்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
இணை இயக்குனர் திரு.என்.சுந்தரராஜன் அவர்கள்(Free Trade Agreement) FTA எனப்படும் “வரியில்லா வணிக ஒப்பந்தம்” பற்றியும் எந்த, எந்த நாடுகளுடன் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அதனால் நம் நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் விபரம், ஒப்பந்தங்களின் நன்மைகள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாடுகளின் பெயர்கள் ஆகியவை பற்றி மிகத் தெளிவாகவும் புதிய உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்பாக உரையாற்றினார்.
பின்னர் மற்ற இணை இயக்குனர்கள் இருவரும் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தன்மை பற்றியும் அந்த பொருளின் தாயகம் அல்லது உற்பத்தி செய்யப்படும் நாட்டின் பெயர்(certificate of orgin) பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
இறக்குமதியாளர்கள், பொருட்கள் பற்றி குறிப்பிடும் விபரங்கள்(Specifications Of Commedities) அதன் தன்மை பற்றியும் விபரமாக விளக்கமளித்தார். மற்றும் (Generalized system of preference) பொதுவாக முன்னுரிமை தரும் முறைகள் பற்றியும் ஏற்றுமதிக்கு தேர்ந்தெடுக்கும் பொருட்கள் பற்றியும் அதற்கு அரசாங்கம் தரும் சலுகைகள் பற்றியும் மிகத்தெளிவாக உரையாற்றினார்.
உதாரணங்களுக்கு, இந்தியா- இலங்கை வர்த்தக ஒப்பந்தம், இந்தியா- சிங்கப்பூர், இந்தியா- ஜப்பான், இந்தியா- கொரியா, இந்தியா- மலேசியா, ஆசியா- பசிபிக் வியாபார ஒப்பந்தம் (Asian- Pacific Trade Agreement) APTA பற்றியும் கூறினார்.
மேலும் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு 3 இணை இயக்குனர்களும் மிக சிறப்பான முறையிலும் எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும் பதிலளித்தனர். பின்னர் அனைவரும் தங்களின் விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்து உதவி மற்றும் சந்தேகங்கள் ஏற்படும் போது தொடர்பு கொண்டு பேசலாம், அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம் என அன்புடன் வேண்டிக்கொண்டனர்.
இந்த மார்ச் மாத பயிற்சி வகுப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் மன நிறைவாக இருந்தது. பின்னர் 3 இயக்குனர்களும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை கௌரவப்படுத்தினார்கள்.
கௌரவிப்புடன் நன்றியுரை
உறுப்பினர் திரு. இராமகிருஷ்ணன், திரு. ஆர்.ஆனந்த், திரு.ராஜா ஆகிய மூன்று பேரும் மூன்று இயக்குனர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். துணைத் தலைவர் திரு.ஜே.கே. முத்து அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.