தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 25.02.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் DIGITAL MARKETING எனும் தலைப்பில் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் மையத்தின் துணைத் தலைவரும் கமலம் குரூப் நிறுவன தலைவருமான திரு.ஜே.கே.முத்து அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
Gulfood – 2015
ஆரம்பமாக வரவேற்புரையாற்றிய மையத் தலைவர் திரு.கே.திருப்பதி ராஜன் அவர்கள், ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் AGRO FOOD CLUSTER-ன் ஒரு செயல்பாடாக துபாயில் நடைபெற்ற GULFOOD எனும் வளைகுடா உணவுத் திருவிழாவிற்கு நமது உறுப்பினர்கள் 30 பேர் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார்கள். தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷனின் தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்களின் எண்ணத்தில் உதித்த AGRIMINE எனும் பொதுவணிகப் பெயர் (COMMON BRAND) அறிமுகப்படுத்தப்பட்டு உணவுப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்கான முறையை நாம் செய்திருந்தோம். இதற்கென ஒரு அரங்கும் GULFOOD ல் அமைக்கப்பட்டது. இதன்மூலம் அரேபிய நாடுகளான துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, சார்ஜா, கத்தார் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளான எகிப்து, அல்ஜீரியா, மொரிட்டீனியா போன்ற நாடுகளிலிருந்து விசாரணைகளும், ஆர்டர்கள் உறுதிப்படுத்தக்ககூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
Canton Export Delegation – 2015
உலகில் சைனா, ஏற்றுமதிக்கு பெயர் போன நாடு! உலக நாடுகள் பல, தங்களுக்கு தேவையான பொருட்களை சைனாவிற்கு வந்து வாங்கிக்கொண்டு போகிறது. சைனாவில் உள்ள Canton என்ற நகரத்தில் நடைபெறும் EXPORT DELEGATIONல் இந்த வருடம் மே மாதம் நமது உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
DIGITAL MARKETING
திரு.ஜே.கே.முத்து அவர்கள் DIGITAL MARKETING எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியபோது, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு பின்பு வரும் இளையதலைமுறையினரின் மூளை,செயல்பாடுகளிலும் கற்பனை திறனிலும் மிகவும் வேகமாக செயல்படுகின்றனர். ஏனெனில் தற்போது வணிகம் செய்பவர்கள் அடுத்த தலைமுறையினருக்குத்தான் ! அவர்கள் தான் பயனாளர்கள். எனவே அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் தேவையை புரிந்துக் கொண்டால் மட்டுமே தொழிலில் இருக்க முடியும் என்கிறார். இதேவேளையில் ONLINE BUSINESS, OFFLINE BUSINESS, TREDITIONAL MARKETING, DIGITAL MARKETING பற்றி விளக்கமளித்தார்.
மேலும் உலகம் முழுவதும் 250 கோடி பேர்(35 சதவீதம்) இணையதளம் உபயோகிக்கிறார்கள். இவர்களில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள் 185 கோடி பேர்(26 சதவீதம்)இந்தியாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் 9 கோடி பேர்(7 சதவீதம்) உலகம் முழுவதும் வாட்ஸ் அப் 70 கோடி பேர் உபயோகிக்கிறார்கள். மற்ற டெலிகிராம், வீ சாட், மெசென்ஞர் போன்றவற்றை 180 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் 13 சதவீதம், இவர்களில் 95 சதவீதம் பேர் தங்களுடைய உள்ளூர் விபரங்களை அறிந்துகொள்ளவும் 91 சதவீதம் பேர் பொருட்களை தேடவும் 60 சதவீதம் பேர் கொள்முதல் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், கூகுள் ப்ளஸ், லிங்க்டின் என பல்வேறு சமூகவலைதளங்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுகிறது என்று விளக்கமளித்தார். அதாவது குறிப்பாக, B2B -Business to Business (விற்பதற்காக வாங்குவது) B2C – Business to Consumer (உபயோகப்படுத்துவதற்காக வாங்குவது) C2C -Consumer to Consumer (உபயோகப்படுத்திய பொருளை இன்னொருவருக்கு உபயோகப்படுத்த விற்றல்) போன்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது என்ற கருத்தின் அடிப்படையில் பேசினார். மேலும் குறைந்த செலவில் இணையத்தையும் ஸ்மார்ட் கருவிகளையும் பயன்படுத்தி ஏற்றுமதி வியாபாரத்தை எவ்வாறு செய்யமுடியும் என்று உதாரணப் படங்களுடன் விளக்கமளித்தார். இதில் பயனுள்ள இணையதளங்களும் குறிப்பிடபட்டன.Digit All Forum
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கீழ் அதன் முதுநிலைத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட YES, EPC, WE, SHARP ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் Digit All என்ற அமைப்பும் முதுநிலைத் தலைவரால் வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, வர்த்தகம் மேற்கொள்ள தொழில்நுட்பமும் ஸ்மார்ட் போனும் சமூக வலைதளங்களும் பேருதவியாக இருப்பது நாம் அறிந்ததே ! எனவே இவைகளை எவ்வாறு வணிகர்கள் தங்களின் தொழிலை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்துவது என்பது பற்றி இந்த அமைப்பின் கீழ் மாதம் மாதம் கருத்தரங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக ஒருங்கிணைப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை தெரிவித்து கருத்தரங்களை நிறைவு செய்தார்.
தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கரு.