தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
27.07.2016 அன்று Hatsun பேரவை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் “Bankers our Partners in PROGRESS” என்ற தலைப்பில் Axis Bankன் DVP & Branch Head திரு.D. ரமேஷ், FOREX திரு.செந்தில் நாதன் மற்றும் Relationship Manager திரு.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Bankers our Partners என்ற தலைப்பின் கீழ் திரு. ரமேஷ் அவர்கள் தனது உரையில், வங்கியாளர்கள் மூலம் ஏற்றுமதியாளர் எவ்வாறு பயன் பெற முடியும் என்பதை அட்டவணையிட்டு காண்பித்தார், ஒரு ஏற்றுமதியாளர் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதையும் விவரமாக கூறினார், ஏற்றுமதியாளர்கள் எந்த ஒரு ஏற்றுமதியையும் வங்கிகள் மூலம் மேற்கொள்ளும் போதும் அவர்கள் பாதுகாப்படைகின்றனர், பணபரிவர்தனைகள் சட்டபூர்வமானதாக நடைபெறுகிறது இதனால் அவர்கள் ஒரு இன்னலும் இன்றி வணிகத்தை தொடரமுடிகிறது தனது உரையை கொண்டார்.
திரு.செந்தில்நாதன் அவர்கள் பேசும் போது அயல்நாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை எளிதாக செய்ய முடியும் என்பதை விளக்கி காட்டினார்.
திரு.விஜயகுமார் அவர்கள் பேசும் பொது ஏற்றுமதியாளருக்கும் Relationship Manager க்கும் உள்ள நெருக்கத்தை சுட்டி காட்டினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதிராஜன் அவர்கள் பேசும் போது வாங்கியாளர் நமது நண்பர் என்பதை ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் தெரிந்து கொள்ள வேண்டும், வங்கிகள் மூலம் ஏற்றுமதியாளர் ஏராளமான நன்மைகள் பெற முடியும் என்று கூறினார்.