தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 12.04.2016 அன்று Mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் FOCUS ON PRODUCT VS FOCUS ON MARKET என்ற தலைப்பில் திரு.V . நீதி மோகன் (YES – Chairman) அவர்கள் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஒரு நிறுவனத்தின் மதிப்பு என்பது அவரின் போட்டியாளர் மற்றும் போட்டியாளரின் சொத்து, நடைமுறைகளை பொறுத்தது, புதிதாக ஒரு வாடிக்கையாளரை தேர்ந்தெடுப்பது பற்றி கூறினார். IDEA என்பதன் விரிவாக்கத்தை தனது தொழில் அனுபவத்தின் மூலம் I – (Information) தகவல் D – (Deal) ஒப்பந்தம் E – (Experience) அனுபவம் A – (Acquire) பெற, மேலும் வேறு யாரும் நினைக்காத செய்யாத ஒரு செயலை செய்யுங்கள் அது மற்ற 99 விஷயங்களில் இல்லை என்ற அளவிற்கு இருக்க வேண்டும், எந்த ஒரு செயலிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்ததாக தலைவர் திரு.k. திருப்பதி ராஜன் பேசும் போது, 2016-17 ம் வருடத்தில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் உருவாக்கம் பற்றி விரிவாக கூறினார். மேலும் ஏற்றுமதியின் வகைகள் பற்றி கூறினார். தற்போது இந்தியாவின் TEXTILE ஏற்றுமதி தற்போது 300 பில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை சுட்டி காட்டினார்.
இவ்வாறு FOCUS ON PRODUCTS Vs FOCUS ON MARKET எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது.