தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 17.06.2016 அன்று Mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் “Choose Your Source” என்ற தலைப்பை ராஜ் எக்ஸிம் நிறுவனரும் நமது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவருமான திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஏற்றுமதி தொழில் ஈடுபடும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது, பொருத்தமில்லாமல் உள்ள தேர்வுகள்,போதுமான ஏற்றுமதி அறிவு இல்லாமல் செயல்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஒரு நல்ல உற்பத்தி அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஏற்றுமதி ஆர்டர்களை கையாள தெரிந்திருக்க வேண்டும், மேலும் ஏற்றுமதியாளர்கள் செயல்களை A , B , மற்றும் C என மூன்று வகையாக பிரித்து அதில் தங்கள் எந்த வகை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு கூறினார், உற்பத்தியின் மதிப்பு / விற்பனை விலை = Inspection cost, ECGC Insurance, Bank charges, Other Expenses. Profit = FOB Price, மாதிரி எடுத்துக்காட்டு விலைப்பட்டியலாக Seair Exim solutions pvt ltdன் Data and Report ஐ காண்பித்து விளக்கினார், பேச்சுவார்த்தை என்பது என்ன, எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை விளக்கமாக விளக்கப்படத்துடன் விவரித்தார் மேலும் insurance செய்வது எவ்வளவு முக்கியமானது என்ற பல மேற்கோள்களை காட்டி விளக்கினார் மக்காச்சோளம் மற்றும் towel ஆகியவற்றின் விரிவான உற்பத்தி செலவு மற்றும் எவ்வாறு விலையை நிர்ணயிப்பது போன்ற excel sheet உடன் அனைவரும் பயன்பெறும் விதமாக தனது உரையை முடித்து கொண்டார்.