தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
22.09.2016 அன்று Mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் “Arbitration – To Protect your Business and Risk Management” என்ற தலைப்பை ராஜ் எக்ஸிம் நிறுவனரும் நமது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவருமான திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஏற்றுமதி தொழிலின் முக்கிய அம்சமான நடுவர் தீர்ப்பாயம் ஏற்றுமதி தொழிலில் ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர விசாரித்து நடுநிலையான முடிவை தருவதே அதன் நோக்கமாகும். ஏற்றுமதியாளர்களிடையே கருத்து வேறுபாட்டினால் ஏற்படும் பிரெச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றது மேலும் தன்னுடைய ஏற்றுமதி தொழில் அனுபவத்தை மேற்கோள் காட்டினார் மேலும் இடர் மேலாண்மையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் விளக்கம் கூறினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு. S. ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.