சுங்க அதிகாரிகள் மேற்பார்வையின்றி இ ஏற்றுமதி செய்யும் சரக்கை இ நிறுவனங்ளே சுயமாக இ ‘சீல்’ செய்து அனுப்பும் நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம்பிக்கை அடிப்படையிலான வர்த்தக சூழலை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி நிறுவனங்கள் அவற்றின் சரக்கை சுயமாக சீலிட்டு அனுப்பும் நடைமுறை அறிமுகமாக உள்ளது.
சுங்க அதிகாரிகள் மேற்பார்வையில் தொழிற்சாலையிலேயே சரக்குகளை ‘சீல்’ செய்து நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
இந்த நடைமுறை அக் 1 முதல் அமலுக்கு வருகிறது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு ‘இ – சீல்’ எண் வழங்கப்படும். இதனுடன் சரக்கு விபரம சுயமாக ‘சீல்’ செய்த நாள் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும ஏற்றுமதி நிறுவனங்கள் சுங்க வரி வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இத்திட்டம் மூலம் ஏற்றுமதியில் நம்பிக்கை அடிப்படையிலான வர்த்தக சூழல் பரவலாகும். அத்துடன் சரக்கு ஏற்றுமதியும் விரைவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.