தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் அதன் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் “EXPORTS IS AN ELEPHANT” என்ற தலைப்பில் ஏற்றுமதி வணிகத்தை யானையுடன் ஒப்பிட்டு மிகச்சிறப்பாக பயிற்சியளித்தார். அதில் 100க்கும் மேற்பட்ட EPC உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.
ஏற்றுமதி வணிகத்தையும் அதன் செயல்பாடுகளையும் தெளிவாக உணராத அல்லது பயிற்சி பெறாதவர்கள், அதை கண்ணில்லாதவர் எப்படி ஒரு யானையை தடவிப் பார்த்து அதன் ஒவ்வொரு பாகங்களுக்கு ஏற்றாற்போல அந்த யானையின் உருவத்தை “யானை தட்டையானது, உருண்டையானது, வரவரப்பானது போன்ற பல உருவத்தை அவர் தம் மனதில் பதித்து விடுகின்றனர் என்று ஆரம்பித்து ஏற்றுமதி வணிகத்தின் வெவ்வேறு நடவடிக்கைகளை யானையின் ஒவ்வொரு பாகத்துடன் ஒப்பிட்டு பயிற்சியளித்தார்.
குறிப்பாக கண்கள், தகவல்களை தேடுதல் மற்றும் சேகரித்தல், தந்தம், இடர்பாடுகளை முறியடித்தல், கால்கள் போக்குவரத்து மேலாண்மை செய்தல் போன்ற இன்னும் பல அரிய தகவல்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
EPC மைய துணைத் தலைவர் திரு.J.K.முத்து அவர்கள் ஏற்றுமதி தொடர்பான பயனுள்ள கருத்துக்களையும் எளிய தமிழில் விளக்கி நன்றி கூறினார்.