தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சேலம் கிளையின் அறிமுகக் கூட்டம்
27.03.2019ம் CJ Pallazio hotelல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Obli Granites நிறுவனர் திரு. O.Mohan மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயன்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் கூறினார். Obli Granites நிறுவனர் திரு. O.Mohan அவர்கள் பேசும் போது ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூறினார்..
நிறைவாக சேலம் கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.M. நடராஜ் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.