தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் புதிய உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம்
26.03.2019ம் நாள் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K . திருப்பதி ராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக BLAACKFOREST நிறுவனர் திரு.B. ஆனந்த் பாபு.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K . திருப்பதி ராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி தொழில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கின்றது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் ஆண்டு தோறும் பல ஏற்றுமதியாளர்களை உருவாக்கி அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது எனவே புதிதாக வந்திருக்கும் உறுப்பினர்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் உதவியோடு ஏற்றுமதியாளர்களாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
BLAACKFOREST நிறுவனர் திரு.B. ஆனந்த் பாபு அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல ஏற்றுமதியாளர்களை உருவாக்கி உள்ளது ஏற்றுமதி செய்து கொண்டு இருப்பவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் உறுப்பினர்கள் பயன் பெரும் வண்ணம் whatsapp மூலம் பல தகவல்களை பரிமாறுகிறது மேலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் இணையதளம் வழியாக பல தகவல்களை அளிக்கிறது.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணை தலைவர் திரு. டேவிட் கமலேஷ் பால் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
Meeting ID – 820 2495 5044