தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சேலம் கிளையின் அறிமுகக் கூட்டம்
27.03.2019ம் EEDISSIA Hallல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக RKG Ghee நிறுவனர் திரு. S. Bhasker மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.S. வெங்கடேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.S. வெங்கடேஷ் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயன்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் கூறினார். RKG Ghee நிறுவனர் திரு. S. Bhasker அவர்கள் பேசும் போது ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூறினார்..
நிறைவாக சேலம் கிளையின் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.P. திருமூர்த்தி அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.