தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 16.06.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் SUCCEED ONLINE எனும் தலைப்பில் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் வரவேற்புரையாற்றியபோது, நாம் இருக்கும் இடத்திலிருந்து நமது பொருட்களை இ-காமர்ஸ் மூலமாக உலகமயமாக்கல் வியாபாரத்திற்கு கொண்டு செல்ல ONLINE அவசியமாகிறது என்றார்.
அடுத்ததாக பேசிய திரு.முருகேஷன் அவர்கள் B2B, B2C இணையதளங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்று உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
அதாவது B2B எனும் INDIA MART, TRADE INDIA, EXPORTERS INDIA, INTERNATIONAL PORTALS, ALIBABA போன்றவையும் B2C எனும் EBAY, FLIP KART, SNAP DEAL போன்றவை பொருட்களை எவ்வாறு விற்பனைக்கு கொண்டு செல்கின்றன என உறுப்பினர்களுக்கு விளக்கியதோடு ஒவ்வொருவரும் இ-காமர்சில் அதிக ஈடுபாட்டோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும் என்று கூறினார்.
இறுதியாக ஒருங்கிணைப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை தெரிவித்து கருத்தரங்கை நிறைவு செய்தார்.