தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 11.7.2013 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஜுலை மாத ஏற்றுமதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஜுன் மாத பயிற்சி வகுப்புக்கு பின் உள்ள நாட்களிலும், ஜுலை மாத பயிற்சிக்கு முன்வரை உள்ள ஒரு மாத காலத்தில் ஏற்றுமதி தொழில் தொடர்பாக மத்திய, மாநில அரசு எடுத்த முடிவுகள், புதிய நாடுகளுடன் ஏற்படுத்திய வணிக ஒப்பந்தங்கள், தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் அமைச்சர் திரு. ஆனந்த் சர்மா அவர்கள், ஏற்றுமதி தொழில் அதன் வளர்ச்சி பற்றியே சிந்தித்து வருகின்றார் என்றும் தினமும் புதுப்புது வளர்ச்சி முறையினை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுவதையும் EPC தலைவர் திரு. K. திருப்பதி ராஜன் அவர்கள் எளிய தமிழில் உறுப்பினர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கி கூறினார்.
அடுத்த நிகழ்வாக EPC துணைத் தலைவர் திரு. J.K முத்து அவர்கள் “ ஏற்றுமதி தொழில்” என்ற தலைப்பில் சிறப்பான பயிற்சியினை உறுப்பினர்களுக்கு வழங்கினார். அவர் ஆற்றிய பயிற்சி உரையிலிருந்து ஏற்றுமதி தொழிலில் ஆரம்பம் முதல், நிர்வாகம் முழுவதும் கணினியில் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது பற்றி விரிவாக கூறினார்.
ஏற்றுமதி தொழில் ஆரம்பம்
விண்ணப்பம் பூர்த்தி செய்து TIN மற்றும் CST உரிமம் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குதல், IE CODE எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய உரிமம் பெறுதல் போன்ற அனைத்தையும் இணைய தளம் மூலம் செய்து முடிக்கலாம் என கூறினார்.
விளம்பரத்தில், சந்தையியலில் இணையதளத்தின் பங்கு
இந்த உபதலைப்பில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை இணையதளம் மூலம் எவ்வாறு விளம்பரம் செய்வது, ஏற்றுமதி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் கூறினார். ADVERTISEMENT, PUBLICITY என்பதன் தமிழ் அர்த்தத்தை விளக்கி கூறினார்.
அதாவது நமது பொருட்களைப் பற்றி நாமே விளம்பரம் செய்து கொள்வது ADVERTISEMENT என்றும் நமது பொருட்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் கூறும் தகவல்கள், பொருளைப் பற்றிய விமர்சனங்கள், தரம் பற்றிய தகவல்களை மற்ற நுகர்வோர்களுக்கு எடுத்துக்கூறினால் அது PUBLICITY என எளிமையான விளக்கம் அளித்தார்.
இணைய தளத்தை நமது ஏற்றுமதி வியாபாரத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என கூறினார். 24 மணிநேரமும் நமக்காகவும் நமது நிறுவன வளர்ச்சிக்காகவும் உழைக்கும் ஒரு உற்ற தோழன்தான் “இணையதளம்” என கூறினார். இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் ஏற்றுமதி தொழிலுக்கு ஒரு மிகச்சிறந்த உறுதுணை இணையதளம் என்பதை கூறினார்.
தான் எவ்வாறு இணையதளத்தை பயன்படுத்தி தொழிலில் வெற்றி பெற்றேன் என்பதையும் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதற்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் கூறினார்.
ஒரு ஏற்றுமதியாளர் இணையதளத்தை பற்றி அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றும் அதற்கான தினமும் குறைந்தது 3 மணிநேரம் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஏற்றுமதி தொழிலின் முதுகெலும்புதான் இணையதளம் என அருமையான விளக்க படங்கள் மூலம் பயிற்சி வழங்கியது,உறுப்பினர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இமெயில் மேலாண்மை அடுத்த நிகழ்வாக இ-மெயில் மேலாண்மை பற்றி பயிற்சி அளித்தார். இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்களில் கூகுள் சிறந்த நிறுவனம் என்று கூறினார். கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் சேவையான ஜி-மெயிலின் அதிக சிறப்புகளை நேரடியாக இணையத்தை இயக்கி, உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கம்(Active based Training & Explanation)அளித்தார்.
ஒவ்வொரு தகவலையும் ஒரு கலரில் வைத்துக்கொள்ளலாம் என்றும் பதில் அளித்த மெயில், பதில் அளிக்காமல் மீதி உள்ள மெயில், யார் பதில் அளிக்க வேண்டும், எத்தனை நபர்கள், எந்த நேரத்தில் பார்வையிட்டார்கள் என்ன மாற்றம் செய்து உள்ளனர், ஒருவருக்கு அனுப்பும் மெயில் மற்றவர்களுக்கு தெரியாமலே அதிக நபர்களுக்கு அனுப்பும் BCC முறை (Block Carbon Copy) பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
E-mail ஐ கண்டுபிடித்தவர் திரு.சிவா அய்யாத்துறை என்ற தமிழர்தான் என்ற தகவலையும், அதை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி Hotmail என்ற தகவலையும் கூறியது உபயோகமாகவும், அதே நேரத்தில் ஒரு தமிழரின் கண்டுபிடிப்பு உலக முழுவதும் அதிக அளவில் பயன்படுகிறது என்பதும் பெருமைக்குரிய விஷயமாக உறுப்பினர்கள் கருதினார்கள்.
துணைத்தலைவர் திரு. J.K.முத்து, அவர்கள் Gmail பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் 10 GB அளவுள்ள சேமிப்புதிறனை வழங்கியுள்ளது என்ற மிக உபயோகமான தகவலையும் கூறினார். மேலும் Gmail-ல் உள்ள Labs, Calender, Undo, Filters, Office Task, ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பயன்படுத்தும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
இணையதளம்
இந்த தலைப்பின் கீழ் கீழ்கண்ட தகவல்களை நமக்கு வழங்கினார். கம்யூட்டர் பயன்பாடு இல்லாத காலங்களில் நாம் ஒருவருக்கு பண்டிகை கால வாழ்த்துக்கள், உறவினர்களுக்கு கடிதங்கள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பும் தகவல்கள், ஆகியவைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினால் 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் சென்று சேரும். ஆனால் தற்போது இண்டர்நெட் யுகத்தில் 10 நிமிடத்தில் ஒரு ஈமெயில் டைப் செய்து அனுப்பினால் 10 நொடியில் உரியவரிடம் சென்று சேர்ந்துவிடும். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
ஒவ்வொரு 18 மாதத்திற்கு ஒருமுறை இதன் கண்டுபிடிப்பு, வேகம் இரண்டுமடங்கு வேகத்தில் செயல்படும். 16,80,000 DVD வரை உள்ள அளவில் தினமும் இணையதளம் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. வரும் 2015ம் ஆண்டிற்குள் இண்டர்நெட் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டும் என புள்ளிவிவரம் சொல்லப்படுகிறது. இந்தியாவில் 15 கோடி மக்கள் இணையதளத்தையும், 6.5கோடி மக்கள் பேஸ்புக் என்ற முகநூலையும், Linkedin என்ற சமூக வலைதளத்தையும், 2 கோடி மக்களும் பயன்படுத்துகின்றனர்.
இணையதளத்தில் ஒரு நாளைக்கு 1000 Applications ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வெப்சைட் தொடங்குகிறார்கள். இணையத்தில் தற்போது ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது Cloud Computing என்பதாகும். Cloud Computing என்பது நமக்கு நிறைய தகவல்கள் உள்ளது என்றால் அதிக அளவு உள்ளவற்றை இந்த Cloud Computing-ல் சேமிக்கலாம்.
உதாரணமாக நமது Desktop மற்றும் Laptop-ல் Memory எனப்படும் பதிவுத்திறன் அளவு 300 முதல் 500GB வரை இருக்கும். நம் கம்யூட்டரில் உள்ள பதிவுதிறன் அளவுக்கு மேல் பதியும் தகவல்களை, இந்த Cloud Computing–ல் சேமித்து வைத்துக் கொள்ளலாம். Cloud Computing –ன் தொழில் நுட்பத்தின் முன்னோடியாக ஈமெயில் சேவையைக் குறிப்பிடலாம். ஈமெயில் சேவை என்பது Cloud Computing –தொழில் நுட்ப சேவையின் Miniature எனக்கூறலாம். இந்த Cloud Computing பற்றியும் துணைத்தலைவர் திரு.J.K.முத்து அவர்கள் விளக்கமாக கூறினார்.
மேலும் இணையதளத்தின் உபசேவைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி நிறுவனங்கள், CRM (Customer Relationship Management) எனப்படும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை என்னும் சேவைகளை பயன்படுத்த முடியும் எனக் கூறினார். இணையத்தின் மூலம் Contact Management, எனப்படும் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற மேலாண்மையை சிறப்பாக நிறுவனங்கள் செய்ய முடியும் என தெரிவித்தார். மேலும் Free Website, Paid Website, Web Promotion பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கும் போது அது Uniqueness Name ஆக இருந்தால் வெளிநாட்டினர் இணையத்தில் தகவல் தேடும் போது அவர்களுக்கு எளிமையாகவும், அந்த நிறுவனம் பிரபலமாக ஆவதற்கு உதவியாக இருக்கும் என்ற உபயோகமான தகவல்களை ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.
MOBILE INTERNET
எதிர்காலத்தில் அலைபேசியில் உபயோகப்படும் இணையதளம் பற்றியும், உறுப்பினர்கள் Android வசதி உள்ள மொபைல் போன்களையும், ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதிக ஆர்டர் பெறவும், தொழில் நுட்ப மேலாண்மை (Technology Management) செய்வதற்கு உதவியாகவும் வசதியாகவும் இருக்கும் என தெரிவித்தார். ஜுலை மாத பயிற்சி வகுப்பு தங்களுக்கு மிக உபயோகமாக இருந்ததாக, இரவு உணவு அருந்தும் போது உறுப்பினர்கள் துணைத்தலைவர் திரு.J.K.முத்து அவர்களுக்கும், தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
MOBILE INTERNET
எதிர்காலத்தில் அலைபேசியில் உபயோகப்படும் இணையதளம் பற்றியும், உறுப்பினர்கள் Android வசதி உள்ள மொபைல் போன்களையும், ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதிக ஆர்டர் பெறவும், தொழில் நுட்ப மேலாண்மை (Technology Management) செய்வதற்கு உதவியாகவும் வசதியாகவும் இருக்கும் என தெரிவித்தார். ஜுலை மாத பயிற்சி வகுப்பு தங்களுக்கு மிக உபயோகமாக இருந்ததாக, இரவு உணவு அருந்தும் போது உறுப்பினர்கள் துணைத்தலைவர் திரு.J.K.முத்து அவர்களுக்கும், தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.