தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
03.02.2017ம் தேதி “PAPERS THAT CARRY YOUR EXPORTS” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசிய பொது ஏற்றுமதியாளர்களுக்கு கட்டாயம் ஆவணங்களை கையாள தெரிந்திருக்க வேண்டும் முறையான ஆவணங்களை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே ஏற்றுமதி தொழில் வெற்றி பெற முடியும் முதலில் ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான IEE Code பெறுவது முதல் பணம் பெறுதல் வரை தேவையான அணைத்து ஆவணங்களையும் தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஆவணங்களையே மிக தைரியமாக ஏற்றுமதி மேம்பாட்டு உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செயல் விளக்க முறையில் விளக்கினார் முதலில் ஏற்றுமதியாளர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஆவணங்களை பற்றி குறிப்பிட்டார் பின்னர் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு பின்னர் தேவையான ஆவணங்கள் என்று அணைத்து விதமான ஆவணங்களையும் செயல் முறை விளக்கமாக காட்டினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.