27.12.2013 அன்று நடந்த ஏற்றுமதி மேம்பாட்டு மைய பயிற்சி வகுப்பில், அதன் துணைத் தலைவர் திரு. ஜே.கே. முத்து அவர்கள், Product Selection and Market identification பற்றி பேசினார்கள்.
இதற்கு முன்னதாக பேசிய மையத்தின் தலைவர் திரு.திருப்பதி ராஜன் அவர்கள், ஏற்றுமதித் துறையில் நடந்துக் கொண்டிருக்கிற நிகழ்வுகள், அத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து Business Line மற்றும் தி இந்து தமிழ் பத்திரிக்கையின் செய்திகளை காண்பித்து எடுத்துரைத்தார்.
இதன்படி இந்தியாவை ஆக்கிரமித்து வரும் ரியல் எஸ்டேட் காரணமாக விவசாய சாகுபடிக்கான பரப்பளவு குறைந்துவருவதாக குறிப்பிட்டார். இதனால் உணவுப்பொருட்களை போதிய அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றார்.
இதனால் வெளிநாடுகளில் தேவைப்படும் உணவுப்பொருட்களை நம்மால் முழுவதும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனக் கூறியதோடு இதை ஏற்றுமதியாளர்கள் கவனித்து அந்த துறையை மீண்டும் வளர்ச்சி பெற முயலவேண்டும் என்றார்.
இதேபோல் மதுரையில் கிரானைட் தொழில் வெற்றிகரமாக நடந்து வந்தது. தற்போது அது மூடுவிழா கண்டதால் மீண்டும் அந்தத் துறையை வளர்ச்சிபெற வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
உலகிலேயே வாழைப்பழத்தை விளைவிப்பதில் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கிறது. கோஸ்டாரிக்கா தனது நாட்டிலிருந்து பெரும்பாலான நாடுகளுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இந்த ஏற்றுமதி இந்தியாவில் மிகவும் குறைவே.
காரணம், எவ்வளவு தான் விளைவித்தாலும் அனைத்தும் இந்தியாவிலேயே விற்கப்படுகிறது. மேலும் 45 சதவீத பழங்கள் வீணடிக்கப்படுகிறது என்றார். அடுத்ததாக Project Export ஐ பற்றி விளக்கினார். அதாவது, இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகள் சென்று, அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது.
ஆப்ரிக்காவின் கானா தேசத்தில் ஆழ்துளை குழாய் மூலமாக தண்ணீர் சப்ளே அமைப்பதற்கான ஒரு திட்டத்தை நாமக்கலைச் சேர்ந்த கம்பெனி ஒன்று வெற்றிகரமாக முடித்துக்கொடுத்ததாகவும் பேசினார். மேலும் Manufacturing ஏற்றுமதியை priority sector ஆக மாற்ற வேண்டும் என்று அரசிடம் பேசப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது என்றார்.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் இந்தியா- ஈரான் இடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் இந்திய ரூபாயால் மட்டுமே நடைபெறுகிறது. இதேபோல் 23 நாடுகளுடன் இந்திய ரூபாய் வைத்தே வர்த்தகம் நடந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு இருக்காது.
இதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுத்துவருவதாக Business Line பத்திரிக்கைகளில் உள்ள செய்தியை குறிப்பிட்டு உறுப்பினர்களுக்கு கூறினார்.
திரு.ஜே.கே முத்து அவர்கள் Product Selection பற்றி பேசுகையில், ஆரம்பகால ஏற்றுமதியாளர்கள் ஒரு பொருளை சில கம்பெனி மட்டுமே விநியோகம் செய்து வந்தால் அந்த பொருளை ஏற்றுமதிக்கு தேர்ந்தெடுத்தல் சிக்கலில் முடியும். விலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிற பொருட்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுக்கக்கூடாது.
மேலும் கடல் உணவுகள், இறைச்சி, ஹெர்பல், ஆயுர்வேதிக், கைவினைப்பொருட்கள், நோட்டு புத்தகங்கள், கிரானைட், முத்துக்கள், ஆபரணங்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கலாம்.
இதில் இறைச்சி வகைகள், ஏற்றுமதியின் உச்சியில் இருக்கிறது. நல்ல முதலீடும் அதற்குரிய அறிவும் இருந்தால் இதை ஏற்றுமதி செய்து இலாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
Market identification பற்றி பேசுகையில், உங்களுடைய கம்பெனி மற்றும் Product ஐ சரியான இமெயில், முகவரி மற்றும் போன்நம்பரை ஆன்லைனில் உள்ள வெப்சைட்டுகளில் லிஸ்ட் பண்ணி வைக்கவேண்டும். உங்களுடைய பொருட்களின் Sell offerஐ வெப்சைட்டுகளில் பதிவேற்ற வேண்டும். தமிழர்கள், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளை கவனித்து அங்கிருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை market செய்யலாம். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்களும் பிற மொழி பேசக்கூடிய இந்தியர்களும் அதிகம் வசிக்கின்றனர்.
இந்திய கலாசாரங்களை பின்பற்றக்கூடிய நாடுகளை அறிந்துகொண்டு அங்கே Market செய்யலாம்.
இந்தியாவுடன் நட்புறவு கொண்ட நாடுகளை தேர்வு செய்ய வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அதிகரிக்கும் நாடுகள், தனிநபரின் வருமானம் கூடும் நாடுகளை தேர்வு செய்யலாம். அருகிலேயே Market செய்யும் படியான நாடு. அதாவது, இலங்கை அருகில் உள்ள நாடு என்பதால் அங்கே எங்களுடைய பொருட்களை அறிமுகம் செய்வதற்கு அங்கு சென்றோம் என்றார்.
மேலும் உலகத்திலேயே இல்லாத ஒரு பொருளை கண்டுபிடித்து ஏற்றுமதிக்கு தேர்வு செய்தல்.
எடுத்துக்காட்டாக, பனைமரத்தில் ஏறக்கூடிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல புதிய பொருட்களை ஏற்றுமதிக்கு தேர்வு செய்யலாம். மக்களுக்கு (PPP- people pain points) கஷ்டம் தரக்கூடிய ஒரு விஷயங்களை தீர்த்து வைப்பது. அதாவது பொருட்களில் இருக்கக்கூடிய பிரச்னைகளை தீர்த்து வைப்பது. இதுபோன்ற முக்கிய தகவல்களை திரு.ஜே.கே.முத்து அவர்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்கள்.