தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம்(EPC) சார்பில் 24.11.2014 அன்று சங்கத்தின் மெப்கோ சிற்றவை அரங்கில் EXPORT RISK MANAGEMENT எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக Mr.S.Sam Freddy Paul (AXIS Bank Asst Vice President & Head – Treasury Relationship), Mr.V.Kumar(ECGC (Export Credit Guarantee Corporation of India) Branch Manager), Mr.N.Rangarajan (United India Insurance Company Ltd., Senior Divisional Manager) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வின் ஆரம்பமாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில் பேசிய ECGC (Export Credit Guarantee Corporation of India) Branch Manager திரு.V.குமார் அவர்கள், ECGC மற்றும் Policyயின் வகைகள் பற்றியும் இது ஏற்றுமதியாளர்களுக்கு எந்தவகையில் பயனளிக்கும், ஒருவேளை சரக்கு, ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னரும் வாங்கியவரிடமிருந்து பணம் வராமல் இருப்பின் அதற்கு உதவுதல், வாங்குபவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளுதல் பற்றியும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
அடுத்ததாக பேசிய AXIS Bank Asst Vice President & Head – Treasury Relationship திரு.S.சாம் பெரட்டி பவுல் அவர்கள், பொதுவாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு அந்நிய செலாவணி (Forex) ஒரு இடர்பாடாக இருக்கும். ஏனெனில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கலாம், சரியலாம்.
உதாரணமாக !
பொதுவாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் அமெரிக்க டாலரில் தான் கணக்கிடப்படும். ஏற்றுமதி செய்யும் நேரத்தில் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு(ரூ.65) இருக்கும். அதற்குரிய பணத்தை, வாங்கியவர் நம்மிடம் ஒரு மாதம் கழித்து அனுப்பும் போது டாலரின் மதிப்பு( ரூ.60)க்கு இருந்தால் ஏற்றுமதியில் நஷ்டமாகும். இந்நேரத்தில் இதை சரிக்கட்ட தங்களிடம் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றி விளக்கினார்.
அடுத்ததாக பேசிய, United India Insurance Company Ltd., Senior Divisional Manager திரு.N.ரெங்கராஜன் அவர்கள், Gargo Insurance என்பது, ஒரு ஏற்றுமதியாளர் அவர் இடத்திலிருந்து எந்த இடத்திற்கு ஏற்றுமதி செய்கிறாரோ அங்குள்ள Ware House( சேமிப்பு கிடங்கு) வரை காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக!
கனடாவிற்கு சரக்கு அனுப்பும் ஏற்றுமதியாளர், அவர் இடத்திலிருந்து அந்த சரக்கு கனடாவில் உள்ள வாங்குபவரின் Ware House (சேமிப்பு கிடங்கு)ற்கு சென்றடையும் வரை காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் சாலைப் போக்குவரத்திலோ கப்பல் போக்குவரத்திலோ ஏதேனும் விபத்துகள் நடந்தால் சரக்குகள் வீணாகிப்போக நிறைய வாய்ப்புகள் உண்டு. அந்நேரத்தில் இந்த காப்பீடு, ஏற்றுமதியாளருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
இவ்வாறு Export செய்கையில், ஏற்படும் இடர்பாடுகளின் போது ஏற்றுமதியாளர்கள் எவ்வாறெல்லாம் செயல்பட்டு அதை கலையலாம் என்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் EXPORT RISK MANAGEMENT எனும் தலைப்பில் மூன்றுவிதமான Riskகளை எதிர்கொண்டு கலைவது குறித்து அமைந்த முதல் கூட்டம் இதுவென்றும் விளக்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு துணைத்தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் நன்றி கூறினார்.