தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
09.01.2017ம் தேதி “MAKE IN INDIA” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களாக திரு.S.Santhakumar, GM – DIC Madurai and திரு.K.Sivasankar, AD – DIC Madurai ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் வாழ்த்துரை தெரிவித்து தொடங்கி வைத்தார் முதலில் பேசிய திரு.S.Santhakumar, GM – DIC Madurai அவர்கள் ஏற்றுமதியில் நமது நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி செய்யாமல் வாங்கி விற்று ஏற்றுமதி செய்கின்றனர் இதனால் பண விரயம் ஏற்படுகிறது ஏற்றுமதியாளர்கள் தாங்களே உற்பத்தி செய்ய முன் வர வேண்டும் இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் உற்பத்தி சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறினார் பின்னர் பேசிய திரு.K.Sivasankar, AD – DIC Madurai அவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது உற்பத்தி திறன் வெகுவாக குறைந்து வருவதாகவும் இந்த நிலை மாற ஏற்றுமதியாளர்கள் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்யாமல் உற்பத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் காலதாமதம் பணவிரயம் போன்றவற்றை முடியும். உற்பத்தியை பெருக்குவதன் மூலம் நாட்டின் முன்னேற்றமும் பலப்படும் என்று கூறி தனது உரையை கொண்டார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.