
தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 09.10.2018ம் தேதி
“Air Cargo” – Connecting Tamilnadu to the World” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக Mr.Sandeep Verghese, ASM – DHL Express அவர்கள் கலந்து கொண்டார் .
Mr.Sandeep Verghese, ASM – DHL Express அவர்கள் பேசிய பொது: ஏற்றுமதியில் கப்பல் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக சரக்கு விமான போக்குவரத்து அதிகம் நடை பெறுகிறது மேலும் நமது பையருக்கு சாம்பிள் அனுப்புவதற்கு நாம் கட்டாயம் விமான போக்குவரத்து மூலமே அனுப்புகிறோம் எனவே அதற்கான நடைமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்தும் நேரடியாக விளக்கி கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.