தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் செயல்படும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்கு 08-12-2015 அன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், சுங்க வரி பற்றிய ஆலோசனைகளும் ஏற்றுமதி, இறக்குமதியில் நாம் எவ்வாறு அதை கையாள்வது குறித்தும் சிறப்பு விருந்தினராக வந்த கார்த்திகேய பிரபு, உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்கள் செல்லும் போது பெறப்படும் இந்த வரி சேவை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்ததாக குறிப்பிட்ட பிரபு, ஏற்றுமதியாளர்கள் சுங்கவரி குறித்த அடிப்படை தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
CUSTOMS என்பது ஒரு TRADE BARRIER ஆகும். இதை சுமூகமாக முடிக்க அந்த இடத்தில் யாரிடம் DOCUMENTS களை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு அதை செய்தால் இந்த வேலை எளிதுதான் என்றார் கார்த்திகேயபிரபு.
அடுத்ததாக தலைவர் திருப்பதி ராஜன் பேசும் போது, ஏற்றுமதியாளர்கள் CUSTOMS பற்றிய முறைகளை தெரிந்துகொண்டால் மட்டும் போதும். மேலும் ஏற்றுமதியாளர்கள் DOCUMENTS REQUIREMENTS -ஐ (INVOICE AND PACKAGING LIST) CUSTOMS புரோக்கர்களிடம் கொடுத்தால் மட்டும் போதும். மற்ற வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
இவ்வாறு CUSTOMS பற்றிய விதிமுறைகள் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டுமென்று இந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது.