ஏற்றுமதியாளர்களுக்கு EXPORT NEGOTIATION திறன் மிக அவசியம் !
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் உள்ள மெப்கோ அரங்கில் 23-08-2014 தேதியில் COMMERCIAL TERMS IN EXPORT NEGOTIATION என்ற தலைப்பில் தலைவர் கே.திருப்பதி ராஜன் அவர்கள் தலைமையிலும் துணைத் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் முன்னிலையிலும் கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் திரு. அண்ணாமலை அவர்களின் வீடியோ தொகுப்பு மற்றும் ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் கேள்வி- பதில் பகுதியும் நடத்தப்பட்டது. இதில் பேசிய துணைத் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள், ஏற்றுமதி வணிகத்தில் தொழில்நுட்பம் அவசியம் என்றார். அதாவது மின்னஞ்சல், ஸ்மார்ட் போன்களில் இருக்கும் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற ஆப்ஸ்கள் ஒருவரை ஒருவர் அதிவேகமாக தொடர்பு கொள்வதற்கு உதவும் என்கிறார்.
“தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு உற்பத்தி மற்றும் காப்புரிமை இரண்டுமே அவசியம் ஆகும். ஏனெனில் நாம் தயாரிக்கும் பொருட்களுக்கான Brandற்கு பதிவு மற்றும் காப்புரிமை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வேறு எவராவது அதனை சொந்தம் கொண்டாடிவிடுவர். மேலும் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு ENTRY BARRIER, EXIT BARRIERஐ அமைக்க வேண்டும். அதாவது, நம்முடைய வாடிக்கையாளர் நம்மை தேடி வந்துவிட்டால் அவர் வெளியே போகக்கூடாது. அதே போல் ஒரு புது வாடிக்கையாளர் நம் பொருட்களைத் தேடி வருவதற்கான வேலைகளையும் செய்ய வேண்டும் என்றார். நமது Brandற்கும் பொருளுக்கும் காப்புரிமைகள் மற்றும் பிரபலப்படுத்துவதன் மூலம் போட்டியாளர்கள் நுழைவதைத் தடுக்கலாம்” என்றார்.
இந்த கருத்தரங்கில் தலைவர் K.திருப்பதி ராஜன் அவர்கள் பேசியதாவது, ஒவ்வொரு ஏற்றுமதி கருத்தரங்கிலும் நடத்தப்படும் பயிற்சிகளை தன் தொழிலில் இணைக்க வேண்டும். அதில் சந்தேகம் இருப்பில் அடுத்த கருத்தரங்கில் இதைப்பற்றி கேட்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்தால் ஒரு ஏற்றுமதியாளர் தன் ஏற்றுமதியை வெற்றிகரமாக செய்துமுடிப்பதற்கு குறைந்த 6 மாதங்கள் ஆகும். இல்லையெனில் 1 வருடத்திற்கு மேலும் ஆகலாம்.
அதேபோல், ஏற்றுமதியாளர்கள் லத்தின் அமெரிக்க நாடுகளை கவனித்து ஏற்றுமதி செய்தால் லாபம் கிடைக்கும். மேலும் பிரிக்ஸ்(BRICS) நாடுகள் எனப்படும் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளையும் ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டும்.
NEGOTIATION
மேலும் இந்த கருத்தரங்கில் Negotiation பற்றி தலைவர் திரு.கே.திருப்பதி ராஜன் அவர்கள் பேசினார்கள். அதாவது Negotiation என்பது இரண்டு நபர்கள் ஒரு விஷயத்தை கலந்து ஆலோசித்து அவ்விஷயத்தில் இரண்டு நபர்களுமே பயனடைய வேண்டும். International Marketல் நம் பொருட்களை கொண்டு செல்லும் போது ஏற்றுமதியாளர்கள்
1. PACKAGE
2. QUANTITY
3. QUALITY
4. TRANSPORTATION
5. DELIVERY
6. PRICE VALIDITY
7. INSURANCE ஆகியவற்றை கவனித்து செயல்பட வேண்டும் என்று விளக்கினார் தலைவர் கே.திருப்பதி ராஜன்.