தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 5-10-2013 அன்று 2013-2014ம் ஆண்டின் புதிதாக சேர்ந்த 60 உறுப்பினர்களுக்கு ஏற்றுமதி தொழில் பற்றிய அறிமுக மற்றும் அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அந்த பயிற்சி வகுப்பில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.கே.திருப்பதி ராஜன் அவர்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், இதுவரை இந்த மையத்தின் மூலம் 50 பேர் ஏற்றுமதியாளர்களாக உள்ளனர் என்றும் அதுபோல் நீங்கள் அனைவரும் ஏற்றுமதியாளராவதற்கு உரிய அனைத்து பயிற்சிகள் வழங்குவோம் என கூறினார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.J.K .முத்து அவர்கள் ஏற்றுமதி தொழிலில் முக்கியத்துவத்தை யானையின் உடலோடு ஒப்பீடு செய்து விளக்கம் அளித்தார். அடுத்த நிகழ்வாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் Core Committee உறுப்பினர் டாக்டர். ஆர். ஆனந்த் அவர்கள் ஏற்றுமதி தொழிலில் பொருட்கள் தேர்வு( Products selection) பற்றி பயிற்சி அளித்தார்.
அதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கிடைக்கும் பொருட்கள் பற்றியும் அவை எந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்ற விபரங்களையும் கூறினார். உறுப்பினர்கள் ஏற்றுமதி தொழிலில் எவ்வாறு பொருட்களை தேர்வு செய்வது என்பது பற்றியும் அதில் இரண்டு நிலைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அது என்னவென்றால் பொருட்களை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஒரு முறை. இரண்டாவது முறை என்னவென்றால் ஒரு நாட்டின் தேவைகளை அறிந்து அந்த நாட்டிற்கு தேவையான பொருட்களை அனுப்புவது; பொருட்கள் தேந்தெடுக்கும் போது அது தனித்தன்மை வாய்ந்த பொருளாகவும் அதற்கு உலக நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும் எனக்கூறினார். குறிப்பாக பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் நல்ல வரவேற்பும் லாபமும் உறுதி என்று கூறினார். மேலும் ஏற்றுமதி தொழிலில் பொருட்களை தேர்வு செய்துவிட்டால் பாதி வேலை முடிந்து விடும் என கூறினார். புதிய உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் இணைய தள முகவரியை
www. commerce.nic.in வழங்கினார்.
அடுத்த நிகழ்வாக Core Committee உறுப்பினர் திரு. ராஜ்குமார் அவர்கள் E- Commerce என்ற தலைப்பின் கீழ் பயிற்சி வழங்கினார். அதில் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட விரும்புகிறவர்கள் E- Commerce ஐ நன்கு பயன்படுத்த வேண்டும் என கூறினார். முதலில் நமது நிறுவனத்தை பற்றியும் நாம் ஏற்றுமதிக்கு தேர்ந்தெடுத்துள்ள பொருட்கள் பற்றியும் இணையதள முகவரி ஒன்றை உருவாக்கி, அதில் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அந்த இணைய தள முகவரி உங்களுக்காக அதாவது ஏற்றுமதியாளர்களுக்காக 24 மணி நேரமும் 7 நாட்களும் மற்றும் வருடத்தின் 365 நாட்களும் உலகம் முழுவதும் ஏற்றுமதியாளர் விபரங்களை வழங்கி கொண்டிருக்கும் என இணைய தள சிறப்பை பற்றி கூறினார். இதை பார்த்து இறக்குமதியாளர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து கவனமாக ஏற்றுமதி ஆர்டர் பெற வேண்டும் என கூறினார்.
அடுத்த நிகழ்வாக Core Committee உறுப்பினர் திரு. சத்யதேவ் அவர்கள் Export Costing என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். ஏற்றுமதி ஆர்டர் பெறுவதற்கு மூல காரணமே இந்த ஏற்றுமதி பொருட்களுக்கான விலை நிர்ணயம். அதற்கு உண்டான செலவினங்களை கணக்கு பார்த்து முடிவும் செய்யும் செயலாகும். ஒரு பொருளை கொள்முதல் செய்வதிலிருந்து அதை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்து செலவு மற்றும் பொருட்களுக்கு பாதுகாப்பிற்காக விபத்து காப்பீட்டு செலவு மற்றும் கப்பலில் ஏற்றுவதற்கு சேவை கட்டணம், கப்பல் மற்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வசூலிக்கும் வாடகை கட்டணம், கண்டெய்னர் சுத்தப்படுத்த மற்றும் நிரப்புவதற்கு வசூலிக்கும் தொகை, அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ள வித்தியாசத்தொகை, மற்றும் ஏற்றுமதியாளருக்கு வேண்டிய லாபம் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்து இறக்குமதியாளருக்கு அனுப்ப வேண்டும் என புதிய உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக பயிற்சி அளித்தார்.
அடுத்த நிகழ்வாக Core Commitee உறுப்பினர் திரு. சாய் சுப்ரமணியன் அவர்கள் Bankers Role In Export Business என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். அதில் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் வெளிநாட்டிற்கு அனுப்பும் பொருட்களுக்கு உரிய பணத்தை வங்கிகளின் மூலம் வங்கிகளின் மூலம் தான் பெறவேண்டும் என கூறினார். மேலும் வங்கிகள் மிகப்பெரிய சேவையை ஏற்றுமதியாளர்களுக்கு செய்து வருகிறது எனக்கூறினார். ஏற்றுமதியாளர்கள் அவர்கள் அனுப்பும் பொருட்களுக்கு Advance Payment, Letter Of Credit, Documents againts Payment மற்றும் Document againts Acceptance போன்ற முறைகளில் பணம் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார். மத்திய, மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையின் படி ஒவ்வொரு ஏற்றுமதி பணம் பரிவர்த்தனையும் கட்டாயமாக வங்கிகளின் மூலம் தான் நடைபெற வேண்டும் என புதிய உறுப்பினர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும்படி விளக்கமாக பயிற்சி அளித்தார். மேலும் அனைத்து ஏற்றுமதி சம்பந்தமான பணப்பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடந்தால் அது ஏற்றுமதியாளர்களுக்கு பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என கூறினார். பயன்கள் என்னவெனில் பணப்பரிவர்த்தனை வங்களின் மூலம் நடைபெறும் போது, வங்கிளானர்கள் ஏற்றுமதியாளரின் திறமையையும், பணம் எவ்வளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டால் எதிர்காலத்தில் நமக்கு தேவையான மூதலீட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை வழங்குவர் என கூறினார். ஆகவே ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையும் கட்டாயமாக வங்கிகளில் மூலமாகத்தான் நடைபெற வேண்டும் எனக்கூறினார்.
இறுதி நிகழ்வாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.J.K முத்து அவர்கள்Export Logistics என்ற தலைப்பில் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார். அதில் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் கவனமாக செயல்பட வேண்டிய வேலை இது மட்டுமே என கூறினார். ஏனெனில் பொருட்கள் கொள்முதல் செய்தது முதல் அதை அட்டைப்பெட்டியில் அடைத்து லாரி மூலம் துறைமுகத்திற்கு அனுப்பி அதை ஏஜென்சிகள் மூலம் கண்டெய்னரில் ஏற்றி பாதுகாப்பாக முறையில் கப்பலில் ஏற்றி அதை நம் இறக்குமதியாளர் துறைமுகத்தில் சேர்த்து அங்கிருந்து நம் இறக்குமதியாளர் கைகளில் சேரும் வரை நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் எனக கூறினார்.
மேலும் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான ஆவணங்களை கவனமாக தயாரித்து Customer and Clearance Forwanding ஏஜென்ட்களிடம் ஆவணங்களை சமர்பித்து நம் வங்கிகளுக்கு பணம் வரும் வரை மிக கவனமாக செயல்பட வேண்டும் எனக்கூறினார். மேலும் Invoice, Bill of Lading, Bill of Exchange, Certificate of Origin, Insurance Certificate ஆகிய ஆவணங்களை கவனமாக தயாரித்துLogistics பகுதிகளை சிறப்பாக முறையில் நிறைவு செய்ய வேண்டும் எனக்கூறினார். ஏற்றுமதி செய்யும் போது மிக மிக கவனமாக செயல்பட வேண்டிய வேலை Lodistics தான் என்றும் தற்பொழுது அதை CHA ஏஜென்சிகள் சிறப்பாக செய்து வருகின்றன. நாம் அவர்கள் கேட்கும் விபரங்களை கொடுத்தால் நம்முடன் சேர்ந்து அந்த ஆவணத்தை சிறப்பாக தயாரித்து வழங்குவார்கள் எனக்கூறினார். இறுதியாக நன்றியுரை திரு.J.K முத்து அவர்கள் கூறினார்கள்.