தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சேலம் கிளையின் கருத்தரங்கு 04.03.2017ம் தேதி “INDIAS POTENTIAL PRODUCTS MATCHING THE GLOBAL NEED” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் பேசிய போது தற்போதய போட்டியான சூழலில் எந்த நாட்டிற்கு எந்த பொருள் தேவை என்பது மிகவும் அவசியம் அப்படி தெரிந்தால் மட்டுமே நம்மால் சரியான பொருளை சரியான நேரத்தில் நல்ல லாபத்தில் ஏற்றுமதி செய்ய முடியும் ஏற்றுமதியாளர்கள் எந்த நாட்டில் என்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.