தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் உள்ள மெப்கோ அரங்கத்தில் 7.5.2013 அன்று மாலை 4.00 மணிக்கு ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் மாதாந்திர பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
மையத்தின் தலைவர் கே. திருப்பதி ராஜன் ஏப்ரல் மற்றும் மே மாதம் பத்திரிக்கைகளில் வெளிவந்த ஏற்றுமதி தொடர்பான கட்டுரைகள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஏற்றுமதி கொள்கைகள் பற்றியும் அரசாங்கத்தின் சலுகைகள் தொழில் வர்த்தக அமைச்சகத்தின் 2009- 2014 வரையிலான ஏற்றுமதி கொள்கையின் முக்கிய அம்சங்களையும் புதிதாக வெளியிட்டுள்ள கொள்கைகளையும் ஊக்கத்தொகை உயர்வினைப் பற்றியும் மிக தெளிவாகவும் எளிய தமிழிலும் விளக்கம் கொடுத்தார்.
இந்த செய்திகளைப் பற்றிய விளக்கங்கள் புதிய உறுப்பினர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு உரிய செய்திகளையும் ஏற்றுமதி தொடர்பான தகவல்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மே மாத பயிற்சி வகுப்பின் சிறப்பு அழைப்பாளர் திரு. நவீன் மிஸ்டிரி என்பவர் மும்பையிலிருந்து அவரின் இரு உதவியாளர்களுடன் நமது பயிற்சி வகுப்புக்கு வந்திருந்து தற்போது வர்த்தக உலகில் பிரபலமாக இயங்கி வரும் மின்னணு வியாபார நிறுவனமான E- BAY மற்றும் PAYPAL பற்றி மிக விளக்கமாக எடுத்துரைத்தார்.
3000 அமெரிக்க டாலர் வரை ஒரே முறையில் பணம் செலுத்தி பொருட்களை வீட்டிற்கே வரவழைத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பணம் செலுத்த வேண்டியிருந்தால் ஒவ்வொரு முறையும் 3000 டாலர்களாக செலுத்தும் வசதியினை E- BAY நிறுவனம் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். ஆடம்பர நகைகள், உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக்கல் பொருட்களையும் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மரச் சாமான்கள், உணவுப் பொருட்கள் ஆகியவைகளை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாகவும் தெரிவித்தார். RETAIL EXPORT செய்துகொள்ளும் வசதியும் இந்த நிறுவனத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
திரு.நவீன் மிஸ்டிரி அவர்களின் உதவியாளர் திரு.மில்டன் அவர்கள் எளிய தமிழில் மேலும் E-BAY நிறுவனத்தின் மற்ற சிறப்பு அம்சங்களையும் அழகாகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்தார். புதிய உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்தார்.
மேலும் நமது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு J.K.முத்து அவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பே E-BAY நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்பு உள்ளதாகவும் தற்போது இது பிரபலமாகி வருவதாலும் எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாகும் என்பதாலும் இந்த நிறுவனத்தைப் பற்றி நமது ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் திரு.நவீன் மிஸ்டிரி அவர்களை இங்கு அழைத்து வந்தேன் எனக் கூறியது உறுப்பினர்கள் அனைவரும் புதுமையை அறிமுகப்படுத்துவதில் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாகவும் தங்கள் ஏற்றுமதி தொழிலுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பதாகவும் உறுப்பினர்கள் சார்பாக திரு. எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.
மொத்தத்தில் மே மாத பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. மேலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் அவர்கள் இருவரும் புதிய உறுப்பினர்களுக்கும் உதவும் வகையில் உறுப்பினர் திரு.R.ஆனந்த் அவர்களை எந்த நேரமும் தொடர்பு கொண்டு உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர். இதனால் உறுப்பினர்கள் மேலும் அதிக மகிழ்ச்சியடைந்தனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்கள் அனைவரும் தலைவர், துணைத் தலைவர் இருவரிடமும் தொடர்ந்து பல அனுபவம் உள்ளவர்களையும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் அழைத்து வந்து சிறப்பான பயிற்சி அளிப்பது தங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் மனதார பாராட்டி மகிழ்ந்தனர். உறுப்பினர்கள் சார்பாக திரு.ராஜா அவர்கள் நன்றி கூறினார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.