தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் சேலம் கிளையின் கருத்தரங்கு 12.05.2018ம் தேதி “EXPORT COMMERCE” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக DIGITALL அமைப்பின் தலைவர் திரு.JK. முத்து அவர்கள் கலந்து கொண்டார் .
DIGITALL அமைப்பின் தலைவர் திரு.JK. முத்து அவர்கள்பேசும் போது இணையத்தை எவ்வாறு இலவசமாக பயன்படுத்தி நமது பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பது குறித்து விரிவாக எடுத்து கூறினார், உதாரணமாக Flipkart, Amazon, Indiamart, Alibaba போன்ற இனைய தளங்கள்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.