Latest News
Home » Events » ஆயுள் நீடிக்க தொழில்நுட்பம் கற்றுக்கொள்ளுங்கள் !

ஆயுள் நீடிக்க தொழில்நுட்பம் கற்றுக்கொள்ளுங்கள் !

தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேசன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 18-12-2014 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில்  SELL THROUGH CELL PHONE எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு ஏற்றுமதி மேம்பாட்டு மைய உறுப்பினர்கள்(Epc) இளம் தொழில் முனைவோர் மைய உறுப்பினர்கள்(Yes), பெண் தொழில்முனைவோர் மைய உறுப்பினர்கள்(We), தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்சின் செயற்குழு உறுப்பினர்கள், Tamil nadu Foodgrains Marketing இயக்குனர் திரு.சுரேஷ் குமார் மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவரும்  தற்போதைய முதுநிலைத்தலைவருமான  திரு.S.இரத்தினவேல், ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன், துணைத் தலைவர் திரு.J.K.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயுள் நீடிக்க தொழில்நுட்பம் கற்றுக்கொள்ளுங்கள்!

இக்கருத்தரங்கின் ஆரம்பமாக வரவேற்புரையாற்றிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.J.k.முத்து அவர்கள், மொபைல் போன்கள் அதாவது ஸ்மார்ட் போன்களின் அத்தியாவசியத்தை பற்றி கூறினார்.

வணிகர்கள் தங்களுடைய வணிகத்தை மிக வேகமாக கொண்டு செல்ல, ஸ்மார்ட்போன்களில் உபயோகப்படுத்தக்கூடிய வாட்ஸ் அப்(WhatsApp), டெலிகிராம்(Telegram), வீ சாட்(WeChat) போன்ற அப்ளிகேஷன்கள் பேருதவியாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தான் கலந்து  கொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் இண்டர்நெட் மற்றும் இணைய வணிகம் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்து வருவதாகவும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டால் தன்னம்பிக்கை வளர்வதுடன் மனிதன் கூடுதலான வருடங்கள் வாழலாம் என்கிற ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லோரும் செல்லும் பாதையில் நீங்கள் போக – முடிய வில்லையெனில்
தனிபாதையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

அதாவது, ஒரு தொழிலில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களின் முதலீடு, கட்டமைப்பு மிகப்பெரியதாக இருக்கும் வேளையில் சிறிய நிறுவனங்கள் அவர்களுடன் போட்டியிட முடியாது. எனவே தனிவழியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வழிதான் இணைய வணிகம் மூலமாக வர்த்தகம் செய்வது என்று E- Commerce முக்கியத்துவம் குறித்து தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் எடுத்துரைத்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு Gargo சேவை தேவை

மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய, தற்போது வணிகர்கள் திருச்சி, கொச்சின் போன்ற நகரங்களை நாடி செல்கிறார்கள்.

அதுவும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும்  சமயத்தில், சிலவேளை 5 டன் கொண்டு சென்றால் 3 டன்கள் மட்டுமே ஏற்றுமதியாகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். மீதி 2 டன்கள் குப்பைகளுக்கு செல்லவேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.

ஆனால் மதுரை விமானநிலையத்தில் ஒரு Gargo சேவையை கொண்டுவந்தால் இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் கொச்சின் செல்லவேண்டிய அவசியமிருக்காது. எனவே,மதுரைக்கும் தென் தமிழகத்திற்கு என்னென்ன கட்டமைப்புகள் தேவை என்பது பற்றி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமனிடம் கேட்டிருக்கிறோம் என்றார் முதுநிலைத் தலைவர் திரு.S.இரத்தின வேல்.

மேலும் E-Bay எனும் இணைய வணிகதளம் மூலமாக உறுப்பினர்கள் பொருட்களை எவ்வாறு விற்பனையோ ஏற்றுமதியோ செய்யலாம் என்பது பற்றி இந்த கருத்தரங்கில் E-bay India நிறுவனத்தின் Reginal மேலாளர் திரு.சன்ஜித் கண்ணா மற்றும் விற்பனை அதிகாரி திரு.பாலாஜி அவர்கள் கலந்துகொண்டு விளக்கமாக பயிற்சியளித்தனர்.

Need Help? Chat with us
PREMIUM MEMBER AREA