Latest News
Home » Events » ஏற்றுமதி வளர்ச்சி கழகங்களின் மூலம் அரசு செய்யும் உதவி மற்றும் ஒத்துழைப்பு

ஏற்றுமதி வளர்ச்சி கழகங்களின் மூலம் அரசு செய்யும் உதவி மற்றும் ஒத்துழைப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி வளர்ச்சி கழகங்களின் மூலம் அரசு செய்யும் உதவி மற்றும் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஜனவரி 29ம் தேதி 2014 அன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உள்ள மெப்கோ அரங்கில்  தலைவர் திரு.கே.திருப்பதி ராஜன் தலைமையிலும் துணைத்தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள் முன்னிலையிலும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு இவற்றை, இரசாயணம் மற்றும் அதன் சார்பு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகமும் (CAPEXIL) EPC யும் இணைந்து நடத்தியது.

வரவேற்புரை

EPC யின் தலைவர் திரு.கே. திருப்பதி  ராஜன் அவர்கள் தனது வரவேற்புரையில்,  CAPEXIL நிறுவனத்தின் கீழ் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. உதாரணமாக கிரானைட், மார்பிள்ஸ்,டைல்ஸ், கடப்பா கற்கள், ஜிப்சம், குவார்ட்ஸ் கற்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து ரசாயணப் பொருட்கள், உரங்கள், பிரிண்டிங் பை, உற்பத்திக்கு தேவையான வேதிப்பொருட்கள் ஆகியவை உள்ளன.

மதுரையிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு கிரானைட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் சிவகாசியில் தீப்பெட்டி ஆலைகள், பட்டாசு பொருட்கள், ஆலைகள், அச்சுக்கூடங்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே ஏற்றுமதி மேம்பாட்டு மையம் CAPEXIL நிறுவனத்துடன் பேசி இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தோம். எதிர்காலத்தில் நாம் அதிக அளவில் மதுரையிலிருந்து கிரானைட் மற்றும் ரசாயணப் பொருட்களை அதிகமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றுமதி செய்வதற்கு நமக்கு CAPEXIL அதிக அளவில் உதவிகளும் சலுகைகளும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு CAPEXIL தலைவர் திரு.அசோகன் அவர்களையும் இயக்குனர் திரு. D. சுரேஷ் பாபு அவர்களையும் வரவேற்று பேசினர்.

அடுத்த நிகழ்வாக CAPEXIL தலைவர் திரு. அசோகன் அவர்கள் உரையில், CAPEXIL நிறுவனம், இராசயணம் மற்றும் அதன் சார்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறது. எல்லாவிதமான பொருட்களும் ஏற்றுமதி செய்பவர்கள் CAPEXIL  உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால் CAPEXIL நிறுவனத்தில் தென்னிந்தியாவில்தான் 50 சதவீதம் மேல் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.

CAPEXIL உங்களுக்காக அனைத்து விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம் என கூறினார்.

மேலும் திரு.அசோகனின் சில அறிவுரைகள்

 • ஏற்றுமதி தொழிலில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுதல்
 • இறக்குமதியாளர்கள் கூறும் அதிகபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுதல்
 • ஏற்றுமதி பொருட்களின் தரத்தை அதிக அளவில் பின்பற்றுதல்
 • பணம் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல்
 • இறக்குமதியாளர்களை பற்றி நன்கு தெரிந்துகொண்ட பின்புதான் பொருட்களை அனுப்புதல்
 • பாதுகாப்பிற்கு 50 சதவீதம் வரை முன்பணம் பெற்றுக்கொள்ளுதல்

அடுத்த நிகழ்வாக CAPEXIL ன் இயக்கனர் திரு.D.சுரேஷ் பாபு அவர்கள் தனது உரையில், பொதுவாக எந்த தொழில் செய்தாலும் ஆர்வம், விடா முயற்சி, கடுமையான உழைப்பு இருந்தால் தான் அத்தொழிலில் வெற்றி அடைய முடியும்.  ஏற்றுமதி தொழிலில் ஈடுபவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏற்றுமதி தொழில் செய்வதால் நமக்கும் நமது நாட்டிற்கும் அதிக அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்றார்.

மேலும் EXPORT  என்ற வார்த்தைக்கு உள்ள அர்த்தங்கள்  உள்ளன. அவை,

EXPLORE – தேடல்
EXPERIENCE – அனுபவம்
PRODUCT – பொருள்
PRICE – விலை
OPTIMIST – நம்பிக்கையுடன் இருப்பது
REVEALATION- தெய்வீக வெளிப்பாடு, ஈடுபாடு
TALENT-திறமை இவை அனைத்தும் தான் ஒரு சிறந்த ஏற்றுமதியாளரை உருவாக்குகிறது.

அதேபோல் இப்போதுள்ள புதிய தொழில்நுட்பம், ஏற்றுமதி தொழிலுக்கு பெரிய உதவியாக உள்ளது. ஒரு PALM TOP போதும், அதை வைத்தே ஏற்றுமதி தொழிலை செய்துவிடலாம் என்றும் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுமதியாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏற்றுமதித் தொழிலுக்கு தேவை  யான அம்சங்கள்

 1. தரம் – QUALITY
 2. குறித்த நேரத்திற்கு அனுப்புதல் – SENDING ON TIME
 3. நியாயமான விலை –  REASONABLE PRICE
 4. உத்தரவு – ORDER
 5. நம்பகத்தன்மை – RELIABILITY
 6. வெளிப்படைத்தன்மை – TRANSPARENCY

இவைதவிர,

 • முடிந்தவரை இறக்குமதியாளரை ஒரு முறையாவது நேரில் சென்று சந்தித்தல்
 • இறக்குமதியாளரை ஏமாற்றமலிருத்தல்
 • பொருட்களை விலை நிர்ணயம் செய்யும் போது அதிகமான தகவல்களை பெறுதல்
 • கப்பல் வாடகை  திடீரென உயர்ந்துவிடும் என்பதால் customs house agent (CHA) அலுவலர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பின்பு விலையை நிர்ணயம் செய்தல்
 • ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பீடு (Valves) உள்ளதால்  ஜப்பான், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பொருட்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருதல்
 • இறக்குமதியாளர் ஆர்டர் கொடுக்கும் முன்பு பொருட்களின் மாதிரிகளை (SAMPLES) அவருக்கு அனுப்புதல்
 • அதற்குரிய அனுமதியும் (APPROVAL) அளவுகளையும் (QUANTITY) கொள்முதல் கடிதம் (PURCHASE ORDER) ஆக பெற்றக்கொள்ளுதல்
 • அந்த பொருட்களுக்கு தேவையான தரச்சான்றிதழ் பெற்று குறித்த நேரத்தில் பொருட்களை, பாதுகாப்பாக அனுப்புதல்
 • ஏற்றுமதி செய்யும் முன் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுதல்
 • பொருட்களை கொள்முதல் செய்யும் போது நேரடியாக களத்திற்கு செல்லுதல்
 • அதேபோல் துறைமுகத்திற்கும் நேரடியாக சென்று வருதல்
 • அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்து பழகிக்கொள்ளுதல்

ஆகியவை ஏற்றுமதியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான தகவல்கள் ஆகும்.

மேலும், எதிர்வரும் 2016ம் ஆண்டு நமது நாடு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதம் அளவு இருக்கும். நமது நாட்டிற்கு தங்க நகை ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. அதனால் தான் கிரேக்கர்கள் நமது நாட்டை LAND OF GOLDEN BIRDS என்று அழைக்கிறார்கள்.

CAPEXIL நிறுவனம்

CAPEXIL ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம் கடந்த 1958ம் ஆண்டு இந்திய கம்பெனிச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவனமான இதில் நாடு முழுவதும் 4500 உறுப்பினர்கள் உள்ளனர்.

CAPEXIL நிறுவனத்தின் கீழ் 16 துணை அமைப்புகள் (PANEL) உள்ளன. கண்ணாடிப்பொருட்கள், காகிதப்பொருட்கள், செராமிக்ஸ், வாகன டயர்கள், டியூப்கள், ரப்பர் பொருட்கள்,  நிலக்கரி, டைட்டானியம், இரும்புத்தாது, டிரைல்ஸ், உலோகப்பொருட்கள், தொழிற்சாலை வேதிப்பொருட்கள், அமிலங்கள், இராசயணப் பொருட்கள் மற்ற வளர்ச்சிக்கழகங்களின் சேராத அனைத்துப்பொருட்களும் இதன் வளர்ச்சிக்கழகத்தில் அடங்கும்.

வெளியுறவுத்துறை, சுங்க இலாகா, வர்த்தக அமைச்சகம், இறக்குமதியாளர்கள், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், வெளிநாட்டில் உள்ள துதரகங்கள் ஆகிய அனைத்து துறைகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பாலமாக செயல்பட்டு ஏற்றுமதி வளர்ச்சிக்கு CAPEXIL அதிக அளவில் ஒத்துழைப்பை வழங்குகிறது.

வெளிநாட்டில் உள்ள சந்தை நிலவரங்கள், ஏற்றுமதிக்கான சூழ்நிலை, பகுப்பாய்வு, உலக பொருளாதார, வியாபார முறை தொகுப்புகள், ஏற்றுமதி நடைமுறை, சூழ்நிலை ஆகிய தகவல்களை எங்கள் உறுப்பினர்கள் வழங்கி அவர்களை ஏற்றுமதிக்கு தகுந்தவாறு தயார்படுத்தி வருகிறோம். மேலும் வெளிநாட்டில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் பங்கு பெற்றால் ரூ.1,50,000 இருந்து அதிக பட்சமாக ரூ.2,50,000 வரை சந்தை மேம்பாட்டு திட்டத்தில் (MDA SCHEME) நிதி உதவி வழங்கி ஏற்றுமதிக்கு ஊக்கப்படுத்தி வருகிறோம்.

பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் உறுப்பினர் மற்றும் பதிவுச் சான்றிதல் வழங்கப்படும். MDA (Marketing Development Assistance) திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற, உறுப்பினர் பதிவுச்சான்றிதழ் பெற்றதலிருந்து ஒரு வருடம் கழித்து விண்ணப்பம் அனுப்பலாம். CAPEXIL வெளியிடும் இதழ்களும் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் CAPEXIL இணையதளத்தில் சென்று இறக்குமதியாளர்கள் முகவரிகளை பதிவிறக்கம்(DOWNLOAD)  செய்து கொள்ளலாம். மேலும் CLUSTER முறையில் அமைப்பை ஏற்படுத்தி ஏற்றுமதி செய்தால் பாதுகாப்பாகவும், அதிக அளவிலும் ஏற்றுமதி செய்யலாம். பொருட்கள் பற்றிய அறிவு, கடின உழைப்பு, தனிப்பட்ட முறையில் உள்ள ஆர்வம் ஆகிய அனைத்தும் இருந்தால் ஏற்றுமதித் தொழிலில் பெரிய அளவில் வளர்ச்சி அடையமுடியும் என தனது உரையில் தெரிவித்தார் திரு.சுரேஷ் பாபு.

அடுத்த நிகழ்வாக பேசிய துணைத்தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்கள், CAPEXILல் உறுப்பினராகி அதன் வழிகாட்டுதலை பெற்று ஏற்றுமதி தொழிலில் வெற்றியடைய வாழ்த்துகிறேன் எனக்கூறினார்.

மேலும் CAPEXIL தலைவர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

 

Need Help? Chat with us
PREMIUM MEMBER AREA