Latest News
Home » Events » ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்வது அவசியம்

ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்வது அவசியம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 10.04.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் STRATEGIES FOR PLANNING A SUCCESSFUL EXIM TRADE எனும் தலைப்பில் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான முதல்  கருத்தரங்கில் மையத்தின் தலைவரும் RAJ EXIM நிறுவனத்தின் தலைவருமான திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் ஆரம்ப உரை நிகழ்த்திய இம்மையத்தின் துணைத் தலைவர் திரு.J.K.முத்து அவர்கள், ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பிக்கும் போதோ அல்லது ஏற்றுமதியில் ஈடுபடும் போதோ வகுக்க வேண்டிய வியூகங்கள், நம்முடைய பலம், பலவீனம், இடர்பாடு, வாய்ப்பு போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கமளித்தார்.

அடுத்து உரையாற்றிய தலைவர் K.திருப்பதி ராஜன், STRATEGIE என்பது பொதுவாக ஒரு இலக்கை அடைய பல்வேறு விதங்களில் முயற்சி செய்து அதில் வெற்றி அடைய வேண்டும் என்பதே!
அதாவது, ஏற்றுமதியில் ஈடுபடுபவர்கள் எந்தவிதமான ஏற்றுமதியில் ஈடுபட வேண்டும் என்றும் அதற்கு தேவையானது என்ன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக !

1. MANUFACTURING EXPORT என்பது ஒரு பொருளை தானே உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்ய வேண்டும் அல்லது ஒரு பொருள் முழுமையாக உருவாகுவதற்கு தேவையானவற்றை வாங்கி, அந்த பொருளை உருவாக்கி ஏற்றுமதி செய்தாலும் MANUFACTURING EXPORTதான் ! ஆச்சி மசாலா, கெவின் கேர் போன்றவை MANUFACTURING EXPORTல் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறன.

2. MERCHANT EXPORT என்பது பொருள்களை மொத்தமாக வாங்கி அதை ஏற்றுமதி செய்வது, இதேவகையில் MERCHANT TRADE என்பது இந்தியாவில் இருந்துகொண்டே ஒரு நாட்டில் பொருட்களை வாங்கி அதை வேறொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது ஆகும்.

3. அடுத்ததாக SERVICE EXPORT என்பது வெறும் சேவைகளை மட்டும் ஏற்றுமதி செய்வது ஆகும். உதாரணமாக, SOFTWARE, TOURISM ஆகியவை இதில் அடங்கும். மேற்கண்டவற்றை ஒரு ஏற்றுமதியாளராக வர முயற்சிப்பவர் தெரிந்துகொண்டு அதற்கேற்ற திட்டமிட்டலை செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பிக்க தேவையான அடிப்படை தகவல்கள்

புதிதாக ஏற்றுமதியாளராக முயற்சிப்பவர் ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது,

  •     PROPRIETARY CONCERN
  •     PARTNERSHIP CONCERN
  •     PUBLIC LIMITED CONCERN என்ற இந்த மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில்
    நிறுவனம் அமையலாம்.

மேலும் PAN CARD, COMPANY NAME, CURRENT ACCOUNT, IE CODE, TIN (OR) CST NUMBER, SERVICE TAX NUMBER ஆகியவை கண்டிப்பாக ஏற்றுமதி நிறுவனத்திற்கு இருத்தல் வேண்டும். இதில் கம்பெனிக்கு வைக்கக்கூடிய பெயர்கள் பொதுவான பெயர்களாக இருத்தல் வேண்டும் என்றார்
இதற்கடுத்தப்படியாக உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு கேள்வி- பதில் மூலமாக விளக்கமளிக்கப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Need Help? Chat with us
PREMIUM MEMBER AREA