Latest News
Home » Events » ஆவணங்கள் குறித்து ஏற்றுமதியாளர் அறிவது அவசியம் !

ஆவணங்கள் குறித்து ஏற்றுமதியாளர் அறிவது அவசியம் !

தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேசன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 29.01.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் நடந்த EPC – ன் மாதாந்திர கருத்தரங்கில், EXPORT DOCUMENTATION என்ற தலைப்பில் திரு. ராஜமூர்த்தி, (Director, Global Institute of Foreign Trade) சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்கில் வரவேற்புரை வழங்கிய EPC Chairman திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள் தனது உரையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும்போது வங்கிகள், துறைமுக அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் அவர்களது வங்கி என்று பலருக்கும் தேவைப்படும் பல்வேறு வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஒரு பொருளை ஒரு முறை ஏற்றுமதி செய்யும்போது கிட்டத்தட்ட ஒரு File முழுவதும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆவணமும் எதற்காக சமர்ப்பிக்கப்படுகிறது, யார் கையெழுத்திடுவார்கள், எப்போது அது செல்லுபடியாகும் போன்ற விபரங்களை பற்றி அந்த துறையில் அனுபவம் உள்ள ஒரு Expert மூலம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஒவ்வொரு ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் நாம் அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளும்போது நம்முடைய நேரம் மற்றும் செலவினை குறைத்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்றார்.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் திரு.ராஜமூர்த்தி அவர்கள் பேசும்போது தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், EPC  அமைப்புக்களில் நானும் ஒரு அங்கத்தினராகவே என்னைக் கருதுகிறேன். ஏனெனில் மதுரையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அது தொடர்பான நிறைய INITIATIVE எடுக்கிறார்கள். அவற்றில் என்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக உள்ளேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு  Yesல் உறுப்பினராக இருந்தேன். என்னுடைய  Career Development – ல் Yes Membership ஒரு மறக்கமுடியாத ஒரு விஷயம் என்றும் கூறினார். ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் தான் ஏற்றுமதி செய்யும் போது சமர்ப்பிக்கும் ஆவணங்கள் குறித்து தெளிவாக அறிந்து வைத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

ஏற்றுமதி- இறக்குமதி ஆவணங்கள் எதற்காக தேவை என்று பார்க்கும்போது, அவற்றின் தேவையை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1. ஏற்றுமதியாளர் மற்றும் இற்குமதியாளர்களிடையே நிகழும் ஒப்பந்தங்களை சரியாக நடைமுறைப்படுத்த சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன.  Commercial Invoice, Packing List, Insurance Certificate, Bill Of Exchange, Shipment Advice, Certificate Of Orgin, Inspection Certificate, Transportation Documents like Air Way Bill, Bill of Lading போன்றவை இவற்றில் அடங்கும்.

2. ஏற்றுமதியாளரின் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை பின்பற்றியதற்காக அரசுக்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துகாட்டாக, நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் போது Export Licence – IEC, AR4/ AR5 Form, Preshipment Inspection Certificate, Export Declaration Form GR/PP/VPP/COD/SOFTEX Form, Shipping Bill போன்ற ஆவணங்களை அரசாங்கத்திற்கு சமர்பிக்க வேண்டும்.

3. இறக்குமதியாளர்களின் நாட்டில் நடைமுறையில் உள்ள இறக்குமதி தொடர்பான சட்ட திட்டங்களுக்குத் தேவையான சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன.  Customs Invoice GSP Certificate Of Orgin போன்ற ஆவணங்கள் இவற்றில் அடங்கும்.

4. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு சில ஆவணங்கள் அவசியமாகின்றன. Application Form, Shipping Bill Duly Authenticated by Customs, Commercial Invoice Attested by Bank, Bank Certificate, Statement Of Exports Certified by the negotiating Bank, Registration Cum Membership form of concerned export promotion Council
போன்ற ஆவணங்கள் இதில் அடங்கும்.
மேற்கண்ட ஆவணங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் அவற்றின் தேவை பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்.

ஏற்றுமதி செய்யும்போது Commercial Invoice, Packing List, Bill Of Exchange, Insurance Certificate போன்ற ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவற்றை சரியான முறையில் தயாரிப்பதன் அவசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும்  Letter of Credit முறையில் பொருளை அனுப்புவது பாதுகாப்பானது என்றாலும் அதில் அடங்கியுளள் ஒவ்வொரு Condition – ஐயும் தெளிவாக புரிந்து எந்தவிதமான விலகுதலும் (Deviation) இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்பதையும், Exchange Control Document மூலம் நாம் சான்றளித்துள்ள அந்நிய செலாவணி நம் கணக்குக்கு வந்தடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் முறையாக பாராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

Need Help? Chat with us
PREMIUM MEMBER AREA