Latest News
Home » Events » ஹேக்கர்களிடம் உஷாராக இருங்கள் !

ஹேக்கர்களிடம் உஷாராக இருங்கள் !

தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேசன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 23-09-2014 அன்று சங்கத்தின் மெப்கோ சிற்றவை அரங்கில் INTERNATIONAL LOGISTICS என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக Diamond Shipping Agencies Pvt Ltd, Tuticorin , joint Managing Director திரு.C. கார்த்திகேய பிரபு மற்றும் Mediterranean Shipping, Tuticorin, Senior Sales Marketing Manager திரு. திதோஸ் சாமுவேல்ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தனர்.
கருத்தரங்கின் ஆரம்பமாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள், உலகின் மிக முக்கியமான வணிக செய்திகளை உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறினார்.
ஹேக்கர்களிடம் உஷாராக இருங்கள் !
ஏற்றுமதி செய்யக் கூடிய வணிகர்கள் குறிப்பாக கடன் அட்டை வைத்திருக்க கூடியவர்கள் தங்கள் அட்டை பற்றிய விபரங்களை எந்த இடத்திலும் தெரிவிக்கக்கூடாது. அந்த அட்டையிலுள்ள விபரங்கள் ஏதெனும் தெரிந்துவிட்டால் பணம் திருடுபோவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென்றும் இதற்கனவே திருடர்கள் இருக்கிறார்கள் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் பேசிய திரு.C. கார்த்திகேய பிரபு அவர்கள், LOGISTICS பற்றி விளக்கி கூறியபோது, ஆரம்பத்தில் Transport மட்டும் தான் Logistics என்று இருந்தது. அடுத்து Transport பண்ணி, ஒரு Where houseல் வைத்து Store பண்ணி பின்பு Delivery பண்ணுவது அதாவது Where houseகும் சேர்ந்து தான் Logistics என்று இருந்தது.
தற்போதுள்ள 3rt pary, 4th party Logistics என்பது ikea, Walmart போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை Delivery செய்துகொள்ளும் என்றார். இதற்கு அடுத்த நிகழ்வாக உறுப்பினர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு திரு.திதோஸ் சாமுவேல் அவர்கள் பதிலளித்தார்கள்.
Need Help? Chat with us
PREMIUM MEMBER AREA