தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 20.07.2017ம் தேதி
“Changing Documentation for Exports on GST” என்ற தலைப்பின் கீழ் Mepco சிற்றவை அரங்கத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு.S. ரத்தினவேல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதி ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக Raj Exim முதுநிலை மேலாளர் திரு.S. நாகமணி கலந்து கொண்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்து வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட Raj Exim முதுநிலை மேலாளர் திரு.S. நாகமணி அவர்கள் ஏற்றுமதி துறையில் பல வருடம் ஆவணங்கள் கையாள்வதில் வல்லவர். GST மூலம் ஏற்றுமதியில் என்னென்ன ஆவணங்கள் மாறி உள்ளது அவற்றை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மிகவும் விளக்கமாக கூறினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் முதுநிலைத் தலைவர் திரு.S. ரத்தினவேல் அவர்கள் உறுப்பினர்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் கூறினார். எவ்வாறு GST உறுதுணையாக உள்ளது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.S. சாய் சுப்ரமணியம் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.