ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 6வது ஆண்டுவிழா 24-08-2016 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.R . Theenachandran – Devi Group of Companies, கலந்து கொண்டார். திரு. S.Rethinavelu, Sr.President – Tamilnadu Chamber Foundation திரு. N.Jegadeesan, President – Tamilnadu Chamber Foundation திரு. V.Neethi Mohan, Managing Trustee – Tamilnadu Chamber Foundation திரு. K.Thirupathi Rajan, Chairman – EPC திரு. S.Ramakrishnan, Vice Chairman – EPC ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.
இந்த விழாவில் மையத்தின் தலைவர் திரு. K. திருப்பதி ராஜன் அவர்கள் தனது வரவேற்புரையில், ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் ஏற்றுமதி செய்யும் உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறோம். இது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மென்மேலும் அவர்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மையத்தின் மூலம் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான விபரங்களை ஒவ்வொரு தலைப்பில் கற்பிக்கிறோம்.