தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 05.05.2017ம் தேதி
“Indiantradeportal.in and Free trade agreements & E-Commerce No Secret” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக FIEO உதவி இயக்குனர் செல்வநாயகி மற்றும் Elysium group of companies நிர்வாக இயக்குனர் சுந்தரேஷன் அவர்கள் கலந்து கொண்டனர்.
FIEO உதவி இயக்குனர் செல்வநாயகி பேசும் போது Indiantradeportal.in எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து விளக்கினார் மேலும் HS code எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்தும் Free trade agreementsகுறித்தும் விரிவாக விளக்கினார்.
Elysium group of companies நிர்வாக இயக்குனர் சுந்தரேஷன் பேசும் போது இணையத்தை எவ்வாறு இலவசமாக பயன்படுத்தி நமது பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பது குறித்து விரிவாக எடுத்து கூறினார், உதாரணமாக Flipkart, Amazon, Indiamart, Alibaba போன்ற இனைய தளங்கள்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.